சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுகில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா. இவர் மீது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மற்றும் தற்போது பயின்றுவரும் மாணவிகள் என்று பலரும் பாலியல் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த அவரை சிறப்பு காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சிவசங்கர் பாபா தனது ஜாமீன் மனுவில் கேளம்பாக்கத்தில் உள்ள சுகில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் எந்த தொடர்பு இல்லை என்று கூறி ஜானின் கேட்டுள்ளார். மேலும் ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்தப் பள்ளிக்கு சென்றதாக மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.