Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மொத்தம் 300 கிலோ…. விற்பனைக்காக வைத்திருந்த சாக்கிலேட்டுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் டோல்கேட் பிளாசாவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் டீக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஒரு கிலோ கலப்பட தேயிலை தூளை பறிமுதல் செய்துள்ளனர். அதன் பிறகு அதனை தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் இரண்டு கடைகளில் காலாவதியான 300 கிலோ சாக்லேட்டுகள் விற்பனைக்காக வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அதன் பிறகு அந்த 300 கிலோ காலாவதியான சாக்லேட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளருக்கு 2000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |