Categories
சினிமா தமிழ் சினிமா

சுதந்திர தின விழா பாடல்…. 12 மொழிகளில் உருவாக்கம்…. இசையமைத்த ஜிவி பிரகாஷ்….!!

நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவிற்காக பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார்.

நமது நாட்டின் 50 ஆவது சுதந்திர தின விழாவில் கவிஞர் வைரமுத்து வரிகளில் “தாய் மண்ணே வணக்கம்” பாடலானது ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதே போன்று தற்போது இந்தியாவில் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழர்களின் தியாகத்தை போற்றும் விதமாகவும், இந்தியாவில் உள்ள சுதந்திர வீரர்களின் பெருமைகளை கூறும் வகையிலும் பாடல் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி ராஜசேகர் இயக்கியுள்ளார்.

இதனை ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இப்பாடலானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற 12 மொழிகளில் உருவாகியுள்ளது. மேலும் பாடலில் உள்ள காட்சிகளனாது தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே காஷ்மீர் வரை உள்ள  இடங்களில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் பாடலில் திரையுலக பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |