சினேகனின் மனைவியான கன்னிகா ரவி நடித்துள்ள திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பல்வேறு பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன். இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானவர். இதனை அடுத்து இவரும் பிரபல சீரியல் நடிகை கன்னிகா ரவியும் 8 வருடங்களாக காதலித்து வந்தனர்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் தான் இவர்களின் திருமணமானது மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிலையில் கவிஞர் சினேகனின் மனைவியான கன்னிகா ரவி நடிக்கும் புதிய திரைப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.