Categories
தேசிய செய்திகள்

மிக்சிங் தடுப்பூசிகள் கிடையாது….. மத்திய அரசு விளக்கம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது  18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஒரு டோஸ் கோவிஷில்டு, ஒரு டோஸ் கோவாக்சின் என இரண்டு வகை தடுப்பூசிகளை சேர்த்து பயன்படுத்தும் பரிசோதனைக்கு பரிந்துரை செய்ததாக வரும் தகவல் தவறு என்றும், அப்படி எதுவும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மிக்சிங் தடுப்பூசிகள் குறித்த ஆய்வுகள் நடந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பும் எந்த பரிந்துரையும் செய்யவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |