தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்ற வேண்டுமா? வேண்டாமா? என்ற விவகாரத்தில் மக்கள் அச்சமடைய வேண்டாம். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை கொரோனா நிவாரண நிதி வாங்காத குடும்ப அட்டைதாரர்கள் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.