இனி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களிடம் தேசிய பென்ஷன் திட்டம் சேவைகளை பெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாகவும் ஊரடங்கு காரணமாகவும் பொருளாதார ரீதியாக பலரும் சிக்கல்களை சந்தித்துள்ளோம். இந்த காலகட்டத்தில் ஏராளமான விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன. இதில் பென்ஷன் விதிவிலக்கல்ல. கொரோனா காலத்தில் சீனியர் சிட்டிசன்களின் நலன் கருதி பென்ஷன் வழங்குவதில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. பென்ஷன் திட்டங்களைப் பொறுத்தவரை தேசிய பென்ஷன் திட்டம் ஏராளமானோர் இடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தேசிய பென்ஷன் திட்டத்துக்கான டிமாண்ட் உயர்ந்து வருகின்றது.
தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் அக்கவுண்ட் திறப்பதற்கான வழி முறை தற்போது எளிமைப் படுத்தப் பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்ட சேவைகளை ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு விநியோகஸ்தராக செயல்பட்டு தேசிய பென்சன் திட்ட சேவைகளை வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புவர் ஈசியாக ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் விண்ணப்பிக்கலாம்.18 முதல் 65 வயது வரையிலானவர்கள் அனைவரும் தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யலாம். எனினும், ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியாது.