பணம் மற்றும் செல்போனை திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து விட்டனர்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூர் பகுதியில் காஜாமைதீன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கடையம் ராமநதி அணையில் குளித்து கொண்டிருக்கும் போது ராஜாராம் தனது ஆடைகளை கரையோரம் வைத்துள்ளார். இதனை பார்த்த மர்ம நபர் ராஜாராமின் சட்டைப் பையிலிருந்த 1500 ரூபாய் பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை திருடியுள்ளார். அதன் பிறகு அந்த மர்ம நபர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடிகளை உடைத்து 3 சாப்பாடு பொட்டலங்களை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் பொதுமக்கள் அந்த மர்ம நபரை கையும் களவுமாக பிடித்து கடையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் ஆவுடையானுர் பகுதியில் வசிக்கும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.