ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை பஞ்சாப் நேஷனல் வங்கி மாற்றியுள்ளது.
முதலீடுகளில் ரிஸ்க் உள்ள முதலீடு ரிஸ்க் இல்லாத முதலீடு என்று இரண்டு வகைகள் உண்டு. ரிஸ்க்கு உள்ள முதலீடுகளில் லாபம் நஷ்டம் இரண்டுமே இருக்கும். ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் லாபம் குறைவு, ஆனால் வருமானத்திற்கு உத்தரவாதம் தரப்படும்.
ரிஸ்க்கு இல்லாத முதலீடுகள் திட்டங்கள் முதன்மையானவர்கள்.ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள், குறிப்பாக சீனியர் சிட்டிசன்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களில் அதிக முதலீடு செய்வார்கள். இப்படி செய்யப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் கடன்களுக்கான வட்டியை பஞ்சாப் நேஷனல் வங்கி மாற்றி அமைத்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன் பட்டியல் இதோ:
7 – 14 நாட்கள் : 2.90%
15 – 29 நாட்கள் : 2.90%
30 – 45 நாட்கள் : 2.90%
46 – 90 நாட்கள் : 3.25%
91 – 179 நாட்கள் : 3.80%
180 – 270 நாட்கள் : 4.40%
271 நாட்கள் – 1 ஆண்டு : 4.40%
1 ஆண்டு – 5%
2 ஆண்டுகள் வரை – 5%
3 ஆண்டுகள் வரை – 5.10%
5 ஆண்டுகள் வரை – 5.25%
10 ஆண்டுகள் வரை – 5.25%