தள்ளுபடி விலையில் பொருட்களை விற்பனை செய்யும் சிறப்பு விற்பனையை அமேசான் நிறுவனம் நாளை தொடங்க உள்ளது.
கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிய காலம் மாறி, கையில் செல்போனை மட்டும் வைத்துக் கொண்டு தேவையான பொருட்களை ஆர்டர் செய்யும் காலம் தற்போது உள்ளது. அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவருமே ஆன்லைன் மூலமாகவே ஷாப்பிங் செய்து வருகின்றனர். குண்டூசி முதல் ஸ்மார்ட்போன் வரை அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் வாங்குவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர் நமது இந்தியர்கள். அதுமட்டுமில்லாமல் ஆன்லைன் ஷாப்பிங்கில் தள்ளுபடி, கேஷ்பேக் உள்ளிட்ட பல சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் ஆன்லைன் ஷாப்பிங் பிரியர்களுக்காக அமேசான் நிறுவனம் சிறப்பு விற்பனையை தொடங்கியுள்ளது. அமேசான் கிரேட் ஃபிரீடம் சேல் என்ற பெயரில் ஆகஸ்ட் 5 முதல் 9 வரை இந்த விற்பனை நடைபெறும். இதில் மொபைல்போன், லேப்டாப், கேமரா, அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், சமையலறை பயன்பாட்டுப் பொருட்கள், டிவி, மளிகை சாமான் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மிகச்சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த ஷாப்பிங்கில் நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால் 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
அதுமட்டுமில்லாமல் எக்சேஞ்ச் ஆஃபரில் ரூ.13,000 வரையில் தள்ளுபடி பெறலாம். கேமரா, டிரைபேட், ரிங் லைட், ஸ்மார்ட் வாட்ச், ஹெட்போன், ஸ்பீக்கர், ஹை ஸ்பீட் வைஃபை போன்ற பொருட்களுக்கு 60 சதவீதம் வரையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. OnePlus Nord 2 5G, OnePlus Nord CE 5G, Redmi Note 10T 5G, Redmi Note 10s, Mi 11x, Samsung M21 2021, Samsung M32, Samsung M42 5G, iQOO Z3 5G, iQOO 7 உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களை குறைந்த விலைக்கு வாங்கலாம்.