எல்ஐசி சரல் பென்ஷன் திட்டத்தின் கீழ் ஒரு முறை பிரிமியம் செலுத்தினால் போதும் வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெற முடியும். இந்தத் திட்டம் தற்போது ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசியில் புதிதாக ஒரு பென்சன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய சரல் பென்ஷன் (Saral Pension) திட்டம் ஜூலை 1 முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 40 முதல் 80 வயது வரையிலானவர்கள் அனைவரும் இத்திட்டத்தில் முதலீடு செய்யலாம். பாலிசி தொடங்கும்போது ஆண்டுத்தொகை விகிதம் உத்தரவாதம் அளிக்கப்படும். ஒரு முறை மட்டும் பிரீமியம் செலுத்தினால் போதும். பின்னர் ஆண்டுத்தொகை செலுத்த வேண்டும். ஆண்டு வாரியாக, அரையாண்டு வாரியாக, கால் ஆண்டுவாரியாக, மாத வாரியாகவும் சந்தா செலுத்தலாம்.
நேரடியாக அருகில் உள்ள எல்ஐசி கிளையிலோ, licindia.in என்ற எல்ஐசி இணையதளத்திலோ இந்த பாலிசியை வாங்கிக்கொள்ளலாம். ஆண்டுக்கு குறைந்தபட்சம் 12 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அரையாண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயும், காலாண்டுக்கு 3000 ரூபாயும், மாதத்துக்கு ஆயிரம் ரூபாயும் முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தின் மூலம் மாதம் 12,000 ரூபாய் உங்களுக்கு பென்ஷன் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய அருகிலுள்ள எல்ஐசி ஏஜென்டை தொடர்புகொண்டு முதலீடு செய்து கொள்ளலாம். பாலிசி தொடங்கி ஆறு மாதங்களில் கடனும் பெற்றுக்கொள்ளலாம்.