இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் புதிய வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதியதாக டியாகோ ஹேட்ச்பேக் மாடலின் லிமிட்டெட் எடிஷன் வேரியண்ட்டை உருவாக்கி வருகிறது. இந்த புதிய காருக்கு டாடா டியாகோ விஸ் எடிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கார் வரும் வாரங்களில் இந்தியாவுக்கு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த காரின் விவரங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த டாடா டியாகோ விஸ் எடிஷன் மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும், டாடா டியாகோ விஸ் ஹேட்ச்பேக் மாடலை சுற்றி ஆரஞ்சு நிற ஹைலைட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் முன்புற கிரில், வீல் கவர்கள் மற்றும் ORVMகளில் ஆரஞ்சு நிறம் பூசப்பட்டுள்ளது. மேலும், புதிய டாடா டியாகோ விஸ் டைட்டானியம் கிரே நிறத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாடா டியாகோ விஸ் எடிஷனின் கியர் லீவர், ஏர் வென்ட் மற்றும் சீட்களில் ஆரஞ்சு நிற அக்சென்ட்களை கொண்டிருக்கலாம்.
இந்த லிமிட்டெட் எடிஷன் மாலில் 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.05 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும், பெட்ரோல் யூனிட் 85 பி.ஹெச்.பி. @6000 ஆர்.பி.எம் மற்றும் 114 என்.எம். டார்க் @3600 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் டீசல் என்ஜின் 69 பி.ஹெச்.பி. மற்றும் 140 என்.எம். டார்க் செயல்திறனையும் வழங்குகிறது. இதன் இரு என்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பெட்ரோல் என்ஜினில் மட்டும் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனாக வழங்கப்பட்டுள்ளது.