Categories
மாநில செய்திகள்

BREAKING: 6 நாட்கள் முழு ஊரடங்கு, 144 தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதனால் ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரி க்கத் தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை பெரம்பலூர் நகராட்சி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிகளில் 144 தடை உத்தரவு உடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் பால் மற்றும் காய்கறிகளை தவிர்த்து பிற கடைகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட வேண்டும். வழிபாட்டு நெறி முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |