சைபர் கிரைம் காவல் நிலையம் பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில் OTP மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டுவிட்டால் உடனடியாக புகார் அளிக்க தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது. தங்கள் வங்கி கணக்கில் இருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு freeze செய்து தடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1552560 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கும்படி சைபர்கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் வேறு ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு நேரில் வராமலேயே https://www.cybercrime.gov.in/ என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.