தங்களது படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்லவிருக்கும் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜீத் அந்நாட்டில் வைத்து சந்திப்பார்களா என்னும் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இவருடைய வலிமை படத்தின் அனைத்து பகுதிகளும் முடிவடைந்த நிலையில் மீதமிருக்கும் சண்டைக் காட்சியை மட்டும் ரஷ்யாவிற்கு சென்று எடுக்கப்படவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
அதே சமயம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தளபதி விஜய் தற்போது பீஸ்ட் படப்பிடிப்பில் மிகவும் ஆரவாரமாக அடித்து வருகிறார். இதனையடுத்து நடிகர் விஜய்யும், பீஸ்ட் படத்தின் குழுவினர்களும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ரஷ்யா செல்ல இருக்கிறார்கள். இந்நிலையில் முன்னணி நடிகர்களான விஜய்யும், அஜித்தும் ரஷ்யாவில் வைத்து சந்தித்துக் கொள்வார்களா என்னும் எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.