Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது…. அதிபர் ஜோ பைடன்….!!!

கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேலும் துரிதப்படுத்தினார். அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4-ம் தேதிக்குள் அமெரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு டோசாவது தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்தார். அதற்கான ஏற்பாடுகளையும் தீவிரமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடந்து வந்தது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்தும் இலக்கை ஜூலை 4ம் தேதிக்குள் அடையவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில், 18 வயதுக்கு மேற்பட்ட 70 சதவீதம் பேருக்கு குறைந்தபட்சம் ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தும் இலக்கு நேற்று முன்தினம்  எட்டப்பட்டது. சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு ஜோ பைடன் நிர்வாகம் தனது இலக்கை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவில் தகுதி வாய்ந்த பெரியவர்களில் 60.6 சதவீதம் பேருக்கும், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 49.7 சதவீதம் பேருக்கும் முழுமையாக தடுப்பூசி (இரண்டு டோஸ்) செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் தற்போது டெல்டா வகை மாறுபாட்டால் கோவிட் பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது. அங்கு நேற்று புதிதாக 56 ஆயிரம் பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |