ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரின் விற்பனை மற்றும் முன்பதிவு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய காரான எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்கி உள்ளது. மேலும் இதனுடன் இந்த புதிய காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களையும் ஹூன்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த புதிய காரில் புதிய வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் மேம்பட்ட ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட்டெட் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், பிரம்மாண்ட பொனெட் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்பு கொண்டுள்ளது.
இதுபோன்றே, புதிய எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பின்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர்கள் இருபுறங்களிலும் வழங்கப்படலாம். மேலும், ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்களும், காரின் உள்புறத்தில் முற்றிலும் புதிய கேபின், பல்வேறு புதிய அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன், 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், கூல்டு முன்புற இருக்கைகள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளது.