Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொபட்டை பறித்த போலீஸ்…. வாலிபர் செய்த செயல்…. சேலத்தில் பரபரப்பு….!!

வாலிபர் கம்பத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி பகுதியில் சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சரவணன் அப்பகுதியில் உள்ள கோரிமேட்டிற்கு தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியில் காவல்துறையினர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனையடுத்து சரவணன் அவ்வழியாக சென்ற போது காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி வண்டிற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர். ஆனால் சரவணனிடம் மொபட்டிற்கான எந்த ஆவணமும் இல்லாததால் அவரின் வண்டியை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணன் அப்பகுதியில் அமைந்துள்ள விளம்பரப் பலகைகளை கட்டுவதற்காக இருந்த  கம்பத்தில் ஏறி சென்று திடீரென தற்கொலை செய்து கொள்வேன் என்று சத்தம் போட்டுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கி வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அதற்கு சரவணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் உதவி கமிஷனர் வேதரத்தினம், தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து சம்பவ இடத்திற்கு சென்று சரவணனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது கம்பத்தின் மேல் இருந்த சரவணன் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது அவ்வழியில் சென்ற தன்னை தடுத்து நிறுத்தி காரணமில்லாமல் தனது மொபட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

எனவே தனது மொபட்டை காவல்துறையினர் திருப்பித் தராவிட்டால் மேலே இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார். இதனைக்கேட்ட உதவி கமிஷனர் வேத ரத்தினம் என்பவர் காவல்துறையினரிடம் விசாரித்தபோது அவர்கள் சரவணன் தான் ஓரு வக்கீல் என்றும், சிறிது நேரம் கழித்து  படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் காவல்துறையினர் சந்தேகம் அடைந்து வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உதவி கமிஷனர் தேவ ரத்தினம் என்பவர் சரவணனிடம் கீழே இறங்கி சென்று உனது மொப்பட்டை வாங்கிச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனைக்கேட்ட சரவணன் கம்பத்தின் மேல் இருந்து கீழே இறங்கி சென்றுள்ளார். அதன்பிறகு காவல்துறையினர் சரவணனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவரின் மொபட்டை ஒப்படைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |