ரெனோல்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ்.6 காரின் சோதனைப் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
ரெனால்ட் நிறுவனத்தின் புதிய பி.எஸ். 6 கேப்டுர் எஸ்.யு.வி. காரின் சோதனை ஓட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் மாடல் கார்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. குறிப்பாக இந்த புதிய பி.எஸ். 6 கார் பெட்ரோலில் மட்டுமே இயக்க வேண்டும் என தெரிகிறது. மேலும், ரெனால்ட் நிறுவனம் கேப்டுர் பி.எஸ். 6 பெட்ரோல் மாடலை அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரெனால்ட் கேப்டுர் பி.எஸ். 6 மாடல் புத்தம் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், என்ஜின் 150 பி.ஹெச்.பி. மற்றும் 250 என்.எம். டார்க் செயல்திறன் வமற்றும் இதனுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் சி.வி.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் தனது டீசல் என்ஜின்களை பி.எஸ். 6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யாது என தெரிவித்தது.
அதன்படி ரெனால்ட் நிறுவனம் இரண்டு டர்போ பெட்ரோல் என்ஜின்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதில் என்ட்ரி லெவல் 1.0 லிட்டர் என்ஜின் 100 பி.ஹெச்.பி. பவர் 160 என்.எம். டார்க், 1.3 லிட்டர் என்ஜின் இருவித டியூனிங்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 130 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 150 பி.ஹெச்.பி. பவர். 250 என்.எம். டார்க் செயல்திறனை வழங்குகிறது.