பப்புவா நியூ கினியாவில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 5 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பப்புவா நியூ கினியா நாட்டில் செபிக் மாகாணத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இரண்டு பேர் பிணைக் கைதிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனிடையே பழங்குடியின கிராமத்திலிருந்து தொலை தூரம் என்பதால் காவல்துறையினர் அதிக அளவில் பணியில் ஈடுபடவில்லை. மேலும் இதே போல் கடந்த ஏப்ரல் மாதம் பழங்குடியினருக்கு இடையேயான சண்டையில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் துப்பாக்கிகளின் வருகை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மோதல்கள் அதிகரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.