Categories
உலக செய்திகள்

13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… தாய்க்காக நீதி கேட்டு போராடிய மகள்… பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்..!!

பிரித்தானியாவில் தாய்க்காக நீதி கேட்டு போராடிய மகள் குறித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1970-ஆம் ஆண்டு பிரித்தானியாவில் உள்ள Erdington பகுதியைச் சேர்ந்த Carvel Bennett ( தற்போது வயது 74 ) என்பவர் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு 14 வயதில் அந்த சிறுமிக்கு குழந்தை ( மகள் ) ஒன்றும் பிறந்துள்ளது. ஆனால் அந்த சிறுமி Carvel Bennett குறித்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கவில்லை. இதையடுத்து பல வருடங்கள் கழித்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த சிறுமியின் குழந்தையான daisy ( தற்போது 45 வயது ) தனது தாய்க்கு நேர்ந்த கொடுமைக்காக நியாயம் கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த சம்பவம் தொடர்பான சாட்சியாக அந்த பெண்ணுடைய DNA மற்றும் அந்தப் பெண்ணின் தாயார் அளித்த வாக்குமூலத்தை கொண்டு Carvel Bennett செய்த குற்றத்தை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து அந்த வழக்கு விசாரணைக்காக கடந்து 2019-ஆம் ஆண்டு Birmingham Crown நீதிமன்றத்திற்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் செய்த Carvel Bennett-க்கு பதினோரு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி அதிரடி உத்தரவிட்டுள்ளது. மேலும் தனது தாய்க்காக நீதி கேட்டு போராடிய மகளை நீதிமன்றம் பாராட்டியுள்ளது.

Categories

Tech |