பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது பிக்பாஸ் 5-வது சீசனுக்கான புதிய லோகோ தயாராகிவிட்டது என்றும் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்த நிகழ்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் தான் 5-வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். மேலும் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.