சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 9 பேர் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு கூடுதல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் அல்லது பின்னர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலத்தகராறு தொடர்பாக கடந்த 2003ஆம் ஆண்டு நரம்பியல் நிபுணரான சுப்பையா கூலிப் படையினரால் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.