ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் சண்முகராஜ் தலைமை தங்கியுள்ளார்.
இதனையடுத்து சங்க நிர்வாகிகள் கணேசன், முருகவேல், முனியசாமி, பெருமாள், பாலு, முனியசாமி மற்றும் தூய்மை பணியாளர் என பலரும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியுள்ளனர். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.