இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு நடை பெற்றுள்ளது. இந்தத் தேர்வில் ஆண்களுக்கு உயரம் தாண்டுதல், கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இதில் புதுக்கோட்டை, அரியலூர் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 549 நபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் 488 நபர்கள் தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து தேர்வு நடைபெற்றதை மாவட்ட சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் நேரில் ஆய்வு செய்துள்ளார்.