இந்தியாவுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா இந்தியாவை பாதுகாப்புத்துறையில் முக்கிய கூட்டாளியாக அங்கீகரித்துள்ளது. இதனால் இந்தியா மேம்பட்ட மற்றும் திறன் வாய்ந்த, பாதுகாப்பு சார்ந்த அதிநவீன தொழில்நுட்பங்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் இந்தியாவிற்கு ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை அமெரிக்கா விற்பனை செய்ய முன்வந்துள்ளது. மேலும் ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு, ஹர்பூன் ரக கப்பல் எதிர்ப்பு ஏவுகணை மற்றும் அது தொடர்பான உபகரணங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் அதற்கு தேவையான சான்றிதழையும் வழங்கியுள்ளது. இதற்கான மொத்த மதிப்பீடு அமெரிக்க டாலரில் ரூபாய் 8.2 கோடி அதாவது 609 கோடி ரூபாய் ஆகும். அமெரிக்க இந்திய உறவு மற்றும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை வலுப்படுத்துவதன் மூலம் இந்த விற்பனை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆதரவு அளிப்பதாகவும் உள்ளது. இந்த ஹர்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை விற்பனை தெற்கு ஆசிய மற்றும் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றம், அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவற்றிற்கு முக்கிய காரணியாக அமையும் என்று கூறப்படுகிறது.