தீப்பெட்டி குடோனில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள இனம்கரிசல்குளம் பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் சொந்தமாக தீப்பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகின்றார். இந்த தொழிற்சாலையில் தயாரிக்கும் தீப்பெட்டிகளை அதன் அருகில் அமைந்துள்ள குடோனில் அடுக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் தீ பெட்டிகளை அடுக்கி வைத்திருந்த குடோனில் திடீரென தீப்பற்றி மளமளவென்று எரியத் தொடங்கியுள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்பையா உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அந்தத் தகவலின் படி காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சி அடித்து பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை முற்றிலும் அணைத்து விட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.