Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறார். அதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு, அவர்களின் நலனை கருதி சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% இட ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கல் ஆகிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மசோதா குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நீதியரசர் முருகேசன் ஆணைய அறிக்கையை செயல்படுத்தும் விதமாக 7.5% இட ஒதுக்கீடு தரப்படுகிறது.

Categories

Tech |