பிரித்தானியாவை சேர்ந்த Sky Brown (13) என்னும் இளம் வீராங்கனை டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இளம் ஒலிம்பிக் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவரும் பிரித்தானியாவை குறிக்கும் Team GB அணியை சேர்ந்தவருமான Sky Brown (13) டோக்கியோவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 32-ஆவது ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொண்டார்.
மேலும் பிரித்தானியாவுக்கு வரலாற்று மிக்க பெருமையைத் தேடிக் கொடுக்கும் விதமாக பார்க்ஸ் ஸ்கெட்டிங் போட்டியில் வெண்கலம் பதக்கமும் வென்றுள்ளார். இதன் மூலமாக பிரித்தானியாவில் மிக இளம் வீராங்கனை ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற பெருமையையும் Sky Brown பெற்றுள்ளார்.