Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே நாளில் தனித்தனி பிரச்சனையால்….2 வாலிபர்கள் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

ஒரே நாளில் தனித்தனி பிரச்சினையால் 2 வாலிபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள விளாம்பட்டி பகுதியில் பாண்டியராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜென்சி என்ற மனைவி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டியராஜுக்கும், ஜென்சிக்கும் இடையே குடும்ப பிரச்சனையால் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஜென்சி, கணவரை விட்டுப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இதனால் பாண்டியராஜ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்கு செல்லாமல் மிகுந்த மனவேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் பாண்டியராஜ் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய பாண்டியராஜின் தந்தையான கருப்பையா தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்ததகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பாண்டியராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்று விருதுநகர் மாவட்டத்திலுள்ள பூச்சக்காப்பட்டி பகுதியில் கருப்புசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக பஞ்சவர்ணம் கணவரை விட்டு பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். இதனால் கருப்புசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ முடியாமல் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கருப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய கருப்பு சாமியின் தாயான அய்யம்மாள் தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருப்புசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |