பிரபல பாலிவுட் ராப் சிங்கர் பாடகர் யோ யோ ஹானி சிங். பஞ்சாபியை தாய் மொழியாகக் கொண்ட இவர், இந்தி மற்றும் பஞ்சாபியில் அதிக பாடல்களைப் பாடியுள்ளார். அதோடு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் மீது அவரது மனைவி, ஷாலினி தல்வார் டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் ‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின்’ கீழ் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், தனது கணவர் ஹானி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2011-ல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தி, கடுமையாக நடத்தியதாகவும், பிற பெண்களுடன் சட்டவிரோதமான உறவுகளை வைத்திருப்பதாகவும் ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து பாடகர் யோ யோ ஹானி சிங்கிற்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன்படி இந்த குற்றச்சாட்டு தொடர்பான அவரது பதிலை தாக்கல் செய்ய வரும் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.