Categories
உலக செய்திகள்

அடுத்த 10 ஆண்டுகளில்… 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகள்… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

உலக அளவில் 5 மில்லியன் குறைவான பெண் குழந்தைகளே அடுத்த 10 வருடங்களில் பிறக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

அனைத்துலக ஆராய்ச்சியாளர்கள் பாலினத் தேர்வுகள் நீண்ட, குறுகிய காலத்தில் சமூகத்தில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஆய்வினை மேற்கொண்டனர். அந்த ஆய்வு கடந்த 50 வருடங்களில் பிறந்த மூன்று பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் ஆண் குழந்தைகளை மட்டுமே விரும்பும் சிலரால் அடுத்த பத்து வருடங்களில் உலக அளவில் 4.7 மில்லியன் குறைவான பெண் குழந்தைகளே பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் உலகில் மூன்றில் ஒரு பங்கினரில் இளம் ஆண்களின் எண்ணிக்கை வரும் 2030-ஆம் ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு கூறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கிழக்காசிய, தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா நாடுகளில் குழந்தைகளின் பாலினத்தை அறிந்து கொண்டு கருக்கலைப்பு செய்யும் முறையும் அதிகரித்துள்ளது. எனவே ஐக்கிய நாடுகள் அமைப்பு பாலின பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறது.

Categories

Tech |