Categories
உலக செய்திகள்

பாலியல் துன்புறுத்தல் செய்த நியூயார்க் கவர்னர்…. பதவி விலக அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தல்….!!!!

நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்தியதாக பல பெண்கள் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் புகார்களை தெரிவித்தனர். இந்த புகார்கள் தொடர்பாக 179 பெண்களிடம் அதிகாரிகள் முதல்கட்ட விசாரணை நடத்தினர். இந்த பாலியல் புகார்கள் குறித்து வழக்கறிஞர்கள் மூலமாக சுதந்திரமான விசாரணையை நடத்த லெடிஷியா ஜேம்சுக்கு கவர்னர் அலுவலகம் பரிந்துரைத்தது.

அதனடிப்படையில் வழக்கறிஞர்கள் ஜூன் ஹெச்.கிம், ஆன்னி எல்.கிளார்க் ஆகியோர் தலைமையலான விசாரணைக் குழுவை ஜேம்ஸ் நியமித்தார். இந்தக் குழு தனது விசாரணை அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில், நியூயார்க் கவர்னர் பல பெண்களுக்கு பாலியல் ரீதியில் துன்புறுத்தல் அளித்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை பதவி விலகு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |