Categories
உலக செய்திகள்

அம்மாடியோ…. அதிர்ஷ்டம்ன்னா அது இப்படி இருக்குனும்… “ரூ75 க்கு கேசினோ விளையாடியவருக்கு ரூ5 கோடி பரிசு”…!!!

அமெரிக்காவில் ஒரு கேசினோ விளையாட்டு மையத்தில் ரூபாய் 75 க்கு விளையாடியவருக்கு 5 கோடி பரிசு கிடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ஷ்டம் என்பது எப்போதாவது ஒரு முறைதான் நம் வீட்டின் கதவை தட்டும் என்று பலரும் தெரிவித்தது உண்டு. அதிர்ஷ்டக் காற்று உங்களுக்கு வீசினால் நீங்கள் பாலைவனத்தில் இருந்தால் கூட பனி மழை பெய்யும் என பலரும் கூறியுள்ளனர். அப்படி ஒரு சம்பவம் தான் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் இந்தியானா என்ற மாகாணத்தில் ஒரு கேசினோ கிளப் ஒன்று இருக்கின்றது. இது ஒரு சூதாட்ட கிளப். இங்கு வருபவர்கள் பல வகையான விளையாட்டுக்களை விளையாடுவர். அதில் பணம் கட்டி விளையாடினால் சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் அதிக பணம் கிடைக்கும்.

அப்படி இல்லை என்றால் நஷ்டம் ஏற்படும். அப்படி ஒருவருக்கு அதிஷ்டம் கூரையை பிய்த்துக்கொண்டு அடித்து இருக்கின்றது. அந்த கிளப்பில் விளையாட போன ஒருவர் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பில் 75 ருபாயை போட்டு விளையாடியுள்ளார். இந்த விளையாட்டில் இவருக்கு 6 லட்சத்து 96 ஆயிரத்து 730 அமெரிக்க டாலர் கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 5 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதுதான் அந்த கேசினோ வரலாற்றிலேயே அதிகபட்ச பரிசுத்தொகை. இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு 2 லட்சத்து 65 ஆயிரத்து 788 அமெரிக்க டாலர் அதிகபட்ச பரிசுத்தொகையாக இருந்தது. இந்தசெய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

Categories

Tech |