சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தார்.
இன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி பல்வறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது, தமிழகத்தில் முக்கிய திட்டங்களை செயல்படுத்த நிலுவையில் உள்ள ரூ.7,825 கோடி விடுவிக்க வேண்டும். மத்திய அரசின் உதவியுடன் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்.
மேலும் கோதாவரி – காவிரி இணைப்புக்கான விரிவான திட்ட அறிக்கையை இறுதி செய்ய வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். உதான் திட்டத்தின் கீழ் சேலம் – சென்னை இடையே மாலையிலும் விமானங்கள் இயக்க வேண்டும். கோவையில் இருந்து துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானங்கள் இயக்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.