லாரியை வழிமறித்த யானையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் லாரியை தனது குட்டியுடன் யானை வழிமறித்துள்ளது. இதனைப்பார்த்த வாகன ஓட்டிகள் சிறிது தூரத்திற்கு முன்பே வாகனங்களை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து யானை தனது குட்டியுடன் வனப்பகுதிக்குள் சிறிது நேரத்திற்குப் பின்பு சென்றுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது, தாளவாடி, ஆசனூர் ஆகிய வனச்சரகங்களுக்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
மேலும் இந்த வனப்பகுதி வழியாக திண்டுக்கல்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை இருக்கின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் அவ்வப்போது மான், புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் உணவு தேடி சாலையை கடக்கின்றன. அவ்வாறு சாலையை கடக்கும்போது வனவிலங்குகள் வாகனங்களை வழிமறித்து வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.