Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஆகஸ்டு 10 வரை நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ போன்ற மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் மத்திய அரசின் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் வெளியானதும் இந்தியா முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு மத்திய அரசின் கண்காணிப்பில் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த வருடம் நீட் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 12ம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு முதல் நீட் தேர்வு வினாத்தாள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்தியாவின் நடப்பு ஆண்டு நடைபெறும் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6ம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 14 வரை ஏற்கனவே பதிவு செய்தவர்கள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Categories

Tech |