பண பலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அதிமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில் எம் . முத்தமிழ்ச் செல்வனும், நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்ததையடுத்து, இன்று விக்கிரவாண்டி தொகுதி வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் மற்றும் நாங்குநேரி வேட்பாளர் ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நாங்குநேரியில் அமைச்சர் தங்கமணி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், பண பலத்தை நம்பி அதிமுக தேர்தலை சந்திக்கவில்லை. மக்களை நம்பியே சந்திக்கிறோம். நாங்குநேரி தொகுதி யில் நடைபெறுவது புகுத்தப்பட்ட தேர்தல் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுபவர் இறக்குமதி செய்யப்பட்ட பணக்கார வேட்பாளர் என விமர்சனம் செய்து பேசினார்.