குழந்தைகளை அடிமைப்படுத்தும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு டெல்லியை சேர்ந்த நீதிபதி நரேஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.
சிறுவர்-சிறுமிகளை பப்ஜி என்றஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளின் மனநிலையை பாதித்ததாக்கவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று கூறி பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளுக்கு இந்தியாவில் கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் பிரீ பையர் போன்ற பல விளையாட்டு செயலிகள் இன்னும் தடை செய்யப்படாமல் இருந்து வருகின்றது. அவற்றை விளையாடும் சிறுவர்கள் அதற்கு அடிமையாகி வருகின்றன என்று பிரதமர் மோடிக்கு டெல்லியை சேர்ந்த மாவட்ட கூடுதல் நீதிபதி நரேஷ்குமார் லாகா கடிதம் எழுதியுள்ளார். எனவே இவற்றை தடைசெய்து குழந்தைகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என அவர் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.