கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் பூச்சிகாடு மற்றும் கே.வி.ஆர். நகர் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பூச்சிகாடு 2 – வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் விமல் மற்றும் முத்துமாரி என்ற பெண் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.