நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் அந்த நிலநடுக்கம் 6.1-ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து ஐரோப்பிய மெடிட்டரேனியன் நில அதிர்வு ஆய்வு மையம் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் போர்ட் பிளேருக்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் நேற்று காலை சுமார் 310 கிலோ மீட்டர் தொலைவில் பயங்கர நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1-ஆக பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.