வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் வெள்ளத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத், கார்த்திக் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மார்ச் மாதம் 20 – ஆம் தேதி இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கார்த்திக் மற்றும் வெள்ளத்துரை ஆகிய இருவரும் சேர்ந்து வினோத்தை தாக்கியுள்ளனர்.
அதில் வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் வெள்ளத்துரை அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவானார். இதுகுறித்து அம்பாசமுத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை ஏற்கனவே கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருந்த வினோத்தின் தந்தையான வெள்ளத்துரையை நேற்று காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.