மாவட்ட அதிகாரி தலைமையில் திருப்பூர் – காங்கயம் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் சாலையில் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே அதனை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சாலையில் வேகத்தடைகள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணக்குமார் தலைமையில் காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் காங்கேயம் சாலையில் குறுக்கு ரோடு சந்திப்பு பகுதியில் வேகத்தடைகள் அமைக்க இடம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து ராஜீவ் நகர் சந்திப்பு, காயத்ரி ஹோட்டல், வேலன் ஹோட்டல் உள்பட 5 – க்கும் மேற்பட்ட பகுதிகளில் வேகத்தடைகள் அமைப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டது. மேலும் அதிகாரிகள் விபத்தை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.