நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஓரளவிற்கு குறைந்து வந்தது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கு மத்தியில் பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா அதிகமாக பரவ வாய்ப்புள்ளது. குறிப்பாக கேரளாவில் தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது.
எனவே இன்று முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு ஆர்டிபிசி சான்றிதழ் கட்டாயம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினாலும் தமிழகத்திற்குள் வரலாம். மேலும் விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கொரோனா பரிசோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.