Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு….! குழப்பங்கள் இருக்கும்….! கவனம் தேவை….!!

விருச்சிகம் ராசி அன்பர்களே.! பண பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டாம். 

இன்றைய நாள் உங்களுக்கு திருப்தி தரும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பினால் நன்மை கிட்டும். எந்த ஒரு காரியத்தையும் உங்களால் எளிதில் செய்து முடிக்க முடியும். இன்று உங்களுக்கு சந்திராஷ்டம தினம் இருப்பதினால் சில காரியங்களில் குழப்பங்கள் இருக்கும். மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். குழப்பங்களால் தெளிவான முடிவு எடுக்க முடியாமல் போகலாம். அதனால் முக்கியமான காரியங்களில் கவனம் தேவை. வெளிநாட்டிலிருந்து உத்தியோகம் தொடர்பாக அழைப்புகள் வரும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு இருக்கும். செல்வாக்கு மிகுந்த நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சினைகள் மாறிவிடும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்கு பின்னர் நடைபெறும். பண பொறுப்புகளை ஏற்று கொள்ள வேண்டாம். வார்த்தைகளில் தெளிவு வேண்டும்.

வாகனங்களில் செல்லும்போது ஆவணங்களை சரிபார்த்து கொண்டு செல்ல வேண்டும். மாணவர்களுக்கு சுறுசுறுப்பாக இயங்க கூடிய நாளாக இருக்கின்றது. மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய கூடிய சூழல் இருக்கின்றது. மாணவர்களுக்கும் முன்னேற்றம் காத்திருக்கின்றது. கவலைப்படாமல் இருக்க வேண்டும். உங்களால் கல்வியிலும் விளையாட்டிலும் ஜெயிக்க முடியும். காதலில் உள்ளவர்கள் நல்லது கெட்டதுகளை புரிந்து கொள்ள வேண்டும். சில நேரத்தில் வார்த்தைகள் கோபமாக வெளிப்படும். அதனால் கொஞ்சம் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள்  மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் மஞ்சள்

Categories

Tech |