Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘அண்ணாத்த’… பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போ?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். மேலும் வருகிற நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி தினத்தில் இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸாகவுள்ளது.

Rajinikanth begins shooting for Annaatthe in Chennai | Entertainment  News,The Indian Express

தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் சிவாவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 12-ஆம் தேதி இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |