Categories
உலக செய்திகள்

தலிபான்களுக்கு எதிராக ராணுவம் எடுத்த நடவடிக்கை…. 2 லட்சம் குடும்பங்களிடம் வைத்துள்ள கோரிக்கை…. வெளியான முக்கிய தகவல்….!!

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தான் குடியிருப்புகளை காலி செய்யுமாறு ராணுவம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேற தலிபான்களின் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே கிராமப்புற பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் தற்போது மாகாண தலைநகரங்களை கைப்பற்ற முனைப்பு காட்டி வருகிறது. இந்நிலையில் Lashkar Gah நகரில் நகரில் ராணுவத்தினருக்கு தலிபான்களுக்கும் இடையே நடந்த மோதலில் 40 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ராணுவம் தலிபான்களுக்கு எதிரான தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி Lashkar Gah  நகரில் இருந்து வெளியேற வேண்டும் எனவும்கேட்டுக் கொண்டுள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் மக்கள் குடியிருப்புகளை விட்டு வெளியேற நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் குடியிருப்புகளை விட்டு வெளியேறுவது சிரமம் என்பது தங்களுக்கு தெரியும் என்றும் ஆனால் பாதுகாப்புக்காக பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Categories

Tech |