தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்து சமய அறநிலைத்துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை எடுத்து வருகிறது. அரசுக்கு சொந்தமான, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோவில் நிலங்கள் மீட்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து கோவில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அன்னை தமிழில் அர்ச்சனை என்ற விளம்பரப் பலகையை வெளியிட்ட நிகழ்ச்சியின்போது தமிழகத்தில் அதிக கல்லூரிகள் கொண்டுவர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதன்படி தமிழகம் முழுவதுமாக ஆக்கிரமிக்கப்பட்ட கோயில்களை மீட்டு கோயிலுக்கு சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.