Categories
உலக செய்திகள்

மாதம் ரூ.7 லட்சம் வரை வருமானம்… பிரபலமான ஷார்ட்ஸ் செயலி… யூடியூப் நிர்வாகம் முக்கிய தகவல்..!!

யூடியூப் நிர்வாகம் “ஷார்ட்ஸ்” செயலியில் வீடியோ வெளியிட்டு அதிக பார்வையாளர்களை பெறுபவதன் மூலம் மாதம் ரூ. 7 லட்சம் வருமானம் ஈட்டமுடியும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

யூட்யூபில் இயங்கி வரும் “ஷார்ட்ஸ்” வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் ரீல் போலவே மிகவும் பிரபலமானவை. ஆனால் அதில் 30 வினாடிகள் கொண்ட வீடியோவை மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த யூடியூப் செயலி தற்போது பிரத்தியேகமாக இயங்க தொடங்கியுள்ளது. மேலும் ஒரு வீடியோவை அந்த செயலியில் பதிவிட்டு அது அதிக பார்வையாளர்களை பெற்றால் ரூ. 7 லட்சம் வரை மாதம் பெற முடியும் என்று யூடியூப் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த “ஷார்ட்ஸ்” செயலிக்காக யூடியூப் நிர்வாகம் 2021- 2022-ஆம் ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர்களை நிதியாக ஒதுக்கியிருக்கிறது. அதில் அதிக பார்வையாளர்களை கொண்ட ஆயிரம் திறமையாளர்களை தேர்ந்தெடுத்து மாதம் ரூபாய் 74 ஆயிரத்திலிருந்து 7.4 லட்சம் வரை வழங்கி வருகிறது. இந்த தகவலை யூட்யூபின் தலைமை வர்த்தக நிர்வாகியான ராபர்ட் கின் தெரிவித்துள்ளார். மேலும் “சூப்பர் சாட்” என்கிற அமைப்பில் பார்வையாளர்களிடம் நேரடியாக பேசி கொள்வதன் மூலமும், அதிக பாலோயர்ஸ்களை பெற்றிருந்தாலும் வருமானம் ஈட்டமுடியும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |