தனுஷின் 44-வது படத்தின் டைட்டில் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாறன், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன்-2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் தனுஷின் 44-வது படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
.@dhanushkraja’s #D44 title will be revealed tomorrow at 6 PM.#D44TitleRevealTomorrow@anirudhofficial @RaashiiKhanna_ @MenenNithya @priya_Bshankar @prakashraaj #Bharathiraja pic.twitter.com/6OzTZ5TAdk
— Sun Pictures (@sunpictures) August 4, 2021
D44 படத்தில் நித்யாமேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் D44 படத்தின் டைட்டில் நாளை (ஆகஸ்ட் 5-ஆம்) தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.